கோடை காலத்தில் வரும் சரும பிரச்சனைகளை தீர்க்கும் ஆலிவ் ஆயில்..,

Default Image

கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக சருமம் வறண்டு பொலி விழந்து காட்சியளிக்கும். அவ்வாறு பொலிவிழந்து இருக்கும் சருமத்தை பாதுகாக்க நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதன் முலம் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

பல ரகங்கள் கொண்ட ஆலிவ் எண்ணையில்  ‘எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆயில்’ தான் சிறந்தது. அதில் தான் எந்த ரசாயன கலப்பிடமும் இல்லை.சருமத்திற்கு எந்த வித பிரச்சனையும் வராது.

ஆலிவ் எண்ணெய்  தேய்த்து குளிப்பதால் சருமம் வழவழப்பாகவும் பொலிவாகவும் காட்சி அளிக்கும்.

ஆலிவ் எண்ணெய் முகத்தில் தேய்ப்பது மட்டுமல்லாமல் உடலில் தேய்த்து வந்தால் அது சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

வெயில் காலங்களில் உடலில் உள்ள பழைய செல்கள் அதிகமாக உதிரும். ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதால் பழைய செல்கள் உதிர்ந்து முகம் பளபளப்பாகும்.  புதிய செல்களுக்கு புத்துணர்வும் கிடைக்கும்.

சிறிய பஞ்சில் ஆலிவ் ஆயில் வைத்து கண்களை சுத்தி தேய்த்து வந்தால் கண்ணில் உள்ள கருவளையம் நீங்கும். மேலும் கண்களுக்கு பபுத்துணர்வு அளிக்கும்.

ஷம்பூ போட்டு குளித்த பின்பு ஆலிவ் எண்ணையை தண்ணீரில் கலந்து குந்தலில் மசாஜ் செய்து மீண்டும் குளித்தால் தலையில் உள்ள பொடுகு தொல்லை நீங்கும்.  முட்டு பகுதிகளில் தேய்த்து வந்தால் எலும்புகள் வலுவாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்