பழைய சாதம் மீந்து போச்சா பழைய சாதத்தில் அல்வா ரெடி !!!!!!!
உணவு என்பது நமது வாழ்க்கையின் அடிப்படைத்தேவைகளில் மிக முக்கியமான ஒன்று ஆகும் .அத்தகைய உணவை நாம் வீணாக்க கூடாது .எனவே நமது நாட்டில் பல பேர் ஒரு வேளைக்கூட உணவு இல்லாமல் பெரிதும் கஷ்டபடுகின்றனர் . மேலும் உணவே மருந்தாகும் அதை நாம் நேரம் தவறாமல் பின்பற்றினால் நமது வாழ்க்கை நல்ல முறையில் இருக்கும்.எனவே பழைய சாதத்தை வீணாக்காமல் அதில் அல்வா எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
- பழையசாதம் -1 கப்
- தேங்காய் பால் -3 கப்
- நெய் -100 மிலி
- ஏலக்காய் -4
- முந்திரி -100கி
- பாசிபருப்பு -50கி
- சர்க்கரை -1/2கி
செய்முறை :
தேவையான அளவு சாதத்தை எடுத்து அதை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும் .இதேபோல் தேங்காய்யையும் திருவி அதனுடைய பாலை எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.பின்பு இவை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.சர்க்கரையையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.இவை மூன்றும் சேர்த்து நன்கு கிளற வேண்டும் மேலும் இந்தக்கலவை கெட்டியாகும் வரை கிளற வேண்டும்.இந்த கலவையில் எண்ணெய் திரண்டு வரும் வரை நன்கு கிளற வேண்டும்.
அதன் பிறகு அடுப்பில் மீண்டும் ஒரு பத்திரத்தை வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரியை பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்பு பாசிபருப்பையும் மற்றும் ஏலக்காயும் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
சாதக்கலவை நன்கு அல்வா பதத்திற்கு கெட்டியானவுடன் அதில் வறுத்து வைத்த முந்திரி,பாசிபருப்பு,ஏலக்காய் மற்றும் நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும் .
இதனை இறக்கி பின்பு ஒரு தட்டில் வைத்து நன்கு பரப்பி விடவேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து அதனை சிறு சிறு துண்டுகளாக்கி பரிமாறவும். இப்போது மிக சுவையான அல்வா ரெடி .