லாட்டரியில் ரூ.1028 கோடி வென்ற வயதான தம்பதியினர்! இந்த பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா?

Default Image

பிரிட்டன் தி நேஷனல் லாட்டரியில், யூரோ மில்லியன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1028 கோடி ரூபாய் பரிசாக வென்று சாதனை படைத்த வயதான தம்பதியினர். 

பிரிட்டனில் வசித்து வரும் பிரான்சிஸ் பேட்டரி தம்பதியினர் பிரபல பிரிட்டன் தி நேஷனல் லாட்டரியில், யூரோ மில்லியன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1028 கோடி ரூபாய் பரிசாக வென்று சாதனை படைத்துள்ளனர். 2019 ஜனவரியில் வெற்றியாளராக ஆனபோது இதுவே 25 ஆண்டு கால வரலாற்றில் லாட்டரியில் வெல்லப்பட்ட நான்காவது மிகப்பெரிய அதிக தொகை ஆகும்.

இந்த மிகப் பெரிய தொகையை வென்ற பின்பு, இந்த தம்பதியினர் செய்த காரியம் அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. லாட்டரியில் 1028 கோடி ரூபாய் வென்ற இந்த தம்பதியினர் வெற்றிக்குப் பிறகு தங்களுக்கு என்று இரண்டு லட்சத்தை விட குறைவான விலையில் ஒரு செகண்ட் ஹேண்ட் ஜாக்குவார் கார் வாங்கி கொண்டுள்ளனர். பிள்ளைகளுக்கும் அவ்வாறே வாங்கி கொடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி லாட்டரி வென்ற இந்த வயதான தம்பதியினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உதவ வேண்டும் என முடிவெடுத்தனர். பின் அந்த பணத்தை பயன்படுத்தி இவர்கள் சுமார் 175 குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளனர். இந்த தம்பதியின் உதவியால் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் புதிய வீடுகளை வாங்கியதோடு, தங்களுடைய கடன்களையும் திருப்பி செலுத்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் அந்த தொகையில் பாதிக்கு மேல் இந்திய ரூபாய் மதிப்பில் அதாவது 600 கோடியை, இப்படி மற்றவர்களுக்கு உதவியாக வழங்கியதாக பிரான்ஸ் இங்கிலாந்து ஊடகங்களிடம் இந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், நகைகளை வாங்குவதைவிட இப்படி மற்றவர்களின் மகிழ்ச்சியை பார்ப்பதுதான் தங்களது சந்தோஷமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்