Ola , Uber கால் டாக்சி ஓட்டுநர்கள் ஞாயிறு நள்ளிரவு முதல் ஸ்டிரைக்!
ஓலா, உபேர் கால் டாக்சி நிறுவனங்களுக்காக கார் ஓட்டுபவர்கள் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
நிறுவனங்களுக்கு சொந்தமான கார்கள், நிறுவனத்தில் பதிவு செய்த கார்கள் என இருவகையாகப் பிரித்து சவாரி வழங்குவதில் ஓலா, உபேர் நிறுவனங்கள் பாரபட்சம் காட்டுவதாக ஓட்டுனர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஈட்டலாம் என்று வாக்குறுதியின் பேரில் 5 லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்த நிலையில், போதிய சவாரி கொடுக்கப்படாத காரணத்தினால் வாக்குறுதி அளித்த தொகையில் பாதியை கூட ஈட்ட முடியவில்லை என்றும் ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே ஓலா, உபேர் நிறுவனங்கள் சொந்தமாக கார் வைத்து சவாரி கொடுக்க கூடாது என்று வலியுறுத்தி ஞாயிறு நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஓட்டுனர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.