இன்று முதல் விற்பனை…ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை மற்றும் முக்கிய அம்சங்கள்…!

Published by
Edison

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை, ஆன்லைனில் முன்பதிவு செய்தல்,  மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து கீழே காண்போம்.

வாகனங்களுக்கான பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால்,பெரும்பாலான மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர்.இதனால்,இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.

ஆன்லைன் புக்கிங்:

அந்த வகையில்,ஓலா இ-ஸ்கூட்டர் முன்பதிவு http://olaelectric.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி கடந்த ஜூலை 16 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது.அதன்படி,ஓலா இ-ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் முன்தொகையாக ரூ. 499 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும்,ஸ்கூட்டர்க்கான தொகையையும் செலுத்திக் பெற்றுக் கொள்ளலாம்.

சிக்கல்:

இதனையடுத்து,ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஆன்லைனில் விற்பனைக்கு வைக்க முயன்ற பிறகு, செப்டம்பர் 9, 2021 இல் இணையதளம் தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டது.இதனால்,விற்பனையை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்தது.

இன்று முதல்:

இந்நிலையில்,ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்று முதல் விற்பனைக்கு வரவுள்ளது.அதன்படி,ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 10 வண்ணங்களில் வருகின்றன.மேலும்,இவை இந்தியாவில் உள்ள 1,000 நகரங்களில் ஓலா நிறுவனத்தால் நேரடியாக வழங்கப்படும்.

ஓலா எலக்ட்ரிக் சிஇஓ பவிஷ் அகர்வால் ட்விட்டரில் ஸ்கூட்டர் விற்பனையை திறந்து வைத்தார்.

விலை:

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ ஆகியவை FAME-II மற்றும் மாநில மானியங்களுக்கு தகுதியானவை, எனவே சில நகரங்களைப் பொருத்து அதன் விலைகள் குறைக்கப்படும்.அதன்படி,டெல்லியில், ஓலா எஸ் 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ .85,009, குஜராத்தில் ரூ .79,000 ஆகும். இதனையடுத்து பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் S1 ஸ்கூட்டர்களுக்கான  மாதாந்திர தவணைகள் (EMI கள்)ரூ .2,999 க்கும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மேம்பட்ட பதிப்பான ஓலா எஸ் 1 ப்ரோவிற்கு, இ.எம்.ஐகள் ரூ. 3,199 முதல் தொடங்கும்.S1 வகை ஸ்கூட்டரின் அதிகபட்ச விலை ரூ.99,999 மற்றும் S1 Pro வகை ஸ்கூட்டரின் விலை ரூ.1,29,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா எஸ் 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்  தற்போது உள்ள பல பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட மிகவும் மலிவு விலையில் உள்ளது.

சிறப்பம்சம்:

  • ஓலா எஸ் 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2.98 கிலோவாட் பேட்டரி பேக் உடன் வருகிறது, அதே நேரத்தில் ஓலா எஸ் 1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 3.97 கிலோவாட் பேட்டரி பேக் கொண்டது.
  • இந்த S1 மாடல் ஓலா ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 121 கி.மீ வரை பயணம் செய்யலாம்.இதன் அதிகபட்ச வேகம் 90 கி.மீ ற்றும் 3.6 வினாடிகளில் 0 முதல் 40 கிமீ வேகத்தை எட்டும்.
  • அதேபோல,S1 PRO மாடல் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 181கி.மீ வரை பயணம் செய்யலாம்.இதன் அதிகபட்ச வேகம் 115 கி.மீ. மற்றும் 3 வினாடிகளில் 0-40 கிமீ வேகத்தையும், 5- வினாடிகளில் 0-60 கிமீ வேகத்தையும் அடைய முடியும்.
  • மேலும்,எஸ் 1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நார்மல், ஸ்போர்ட் மற்றும் ஹைப்பர் ஆகிய 3 வகையான பயண நிலைகள்(ரைடிங் மோட்களும்) உள்ளன.
  • மேலும்,ஓலா எஸ் 1 ப்ரோவை 6 மணி 30 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும், அதே நேரத்தில் ஓலா எஸ் 1 மாடலை சார்ஜ் செய்ய 4 மணி 48 நிமிடங்கள் ஆகும்.
  • ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்மார்ட் வாகன கட்டுப்பாட்டு அலகு (VCU), ஆக்டா-கோர் செயலி, 3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜி, வைஃபை மற்றும் ப்ளூடூத் மூலம் அதிவேக இணைப்புடன் வழங்கப்படுகிறது.

  • 7 அங்குல தொடுதிரை அம்சத்தை வழங்கப்படுகிறது. ஓலா எஸ் 1 மற்றும் ஓலா எஸ் 1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ரிவர்ஸ்-பார்க் அசிஸ்ட், ஹில்-ஹோல்ட் சிஸ்டம் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றுடன் கூடுதல் வசதிக்கான அம்சத்துடன் வருகின்றன.
  • மற்ற முக்கிய மின்னணு சாதனங்கள் அருகாமையில் பூட்டுதல்/திறத்தல், ரிமோட் கண்ட்ரோல் மூலம் பூட்டுதல்/திறத்தல், ஆன் போர்டு நேவிகேஷன், ஜியோ-ஃபென்சிங், மொபைல் போன் கால் & மெசேஜ் அலர்ட்ஸ் மற்றும் திருட்டு எதிர்ப்பு அலாரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Recent Posts

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

7 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

10 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

12 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

12 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

13 hours ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

13 hours ago