கார்களை வாங்குவது,விற்பது தொடர்பான வாகன வர்த்தக தளத்தில் ஓலா நிறுவனம் களமிறங்கியுள்ளது.
பிரபல வாடகை கார் நிறுவனமான ஓலா,மின்சார வாகனத்துறையில் முதலீடு செய்து,ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் புதிய சாதனை படைத்து வருகிறது.இந்த நிலையில்,தற்போது வாகன வர்த்தக தளத்தில் களம் இறங்கியிருக்கிறது. ‘ஓலா கார்ஸ்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வாகன வர்த்தக தளம் மூலமாக புதிய கார்கள் மற்றும் பழைய கார்கள் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,வாகன நிதி மற்றும் காப்பீடு, பதிவு, வாகன சேவை உள்ளிட்ட பராமரிப்பு, பாகங்கள் மற்றும் இறுதியாக வாகனத்தை மீண்டும் ஓலா கார்களுக்கு மறுவிற்பனை செய்வது போன்ற சேவைகளை வழங்கும். கார்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் மற்றும் நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடையாக (one-stop shop) மாற்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த சேவை முதற்கட்டமாக 30 நகரங்களில் கிடைக்கும் மற்றும் ஓலா கார்கள் அடுத்த ஆண்டுக்குள் 100 க்கும் மேற்பட்ட நகரங்களில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,ஓலா கார்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக அருண் சிர்தேஷ்முகை நியமிப்பதாகவும் நிறுவனம் அறிவித்தது.இவர் முழு விற்பனை மற்றும் விநியோகம், சேவை, சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் வணிகத்திற்கான சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை மேற்பார்வையிடுவார்.
இது தொடர்பாக,அருண் சிர்தேஷ்முக் கூறுகையில்,”நுகர்வோரின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்பம் சார்ந்த புதுமைகளை வழங்க ஓலா எப்போதும் உறுதி கொண்டுள்ளது.அதன்படி,இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் அடுத்த சில மாதங்களில் தீவிரமாக விரிவாக்க திட்டமிட்டுள்ளோம்”,என்று கூறினார்.
இதற்கு முன்னதாக,அருண் சிர்தேஷ்முக் அமேசான் இந்தியா, ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் மற்றும் ஐபிஎம் குளோபல் சர்வீசஸ் போன்ற நிறுவனங்களுடன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…