இலங்கை கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்த எண்ணெய் கப்பலில் 79 மணிநேரம் மீட்புப் பணிகளுக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.
இலங்கை பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட நியூ டைமண்ட் எனும் எண்ணெய் கப்பல் குவைத்திலிருந்து இந்தியாவிற்கு 2 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் எடையுடன் வந்துள்ளது. அதில் 23 பிலிப்பைன்ஸ் மற்றும் கிரேக்க நாட்டை சேர்ந்த ஊழியர்கள் இருந்துள்ளனர். இந்த கப்பலின் எஞ்சின் அறையில் கொதிகலன் வெடித்ததால் கப்பல் தீப்பிடித்து எரிந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டவுடன் தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை விமானப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை துவங்கி உள்ளனர்.
இருப்பினும் தீ கட்டுக்குள் வராததால் இலங்கையின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியாவும் இந்த பணியில் இணைந்துள்ளது. அதன்படி இந்தியாவின் கடலோர காவல் படையை சேர்ந்த 5 கப்பல்கள் ஒரு கடற்படை கப்பல் மற்றும் இரண்டு டோர்னியர் விமானங்கள் என பெரும்படை சேர்ந்து தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. 79 மணி நேர கடும் போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது. இந்த தீயணைப்பு பணிகளின் போது சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களும் இருந்துள்ளனர்.
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…