ஓ மை கடவுளே படத்தினை மகேஷ் பாபு அவர்கள் பார்த்து விட்டு படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகாசிங், வாணிபோஜன், ஷாரா, எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும், விது அயன்னா ஒளிப்பதிவில் லியான் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். அதன் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி கடவுளாகவும், இயக்குநர் கௌதம் மேனன் கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை பார்த்து விட்டு தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, ஓ மை கடவுளே படத்தின் ஒவ்வோரு காட்சியையும் நான் ரசித்தேன், அனைவரும் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.அஷ்வத் சிறப்பாக எழுதி டைரக்ட் செய்துள்ளதாகவும், அஸ்வினின் நடிப்பு எளிமையாக இருந்ததாகவும் கூறியுள்ளார். இந்த பதிவிற்கு இயக்குநர் அஷ்வத், அஸ்வின், ரித்திகாசிங், வாணிபோஜன் ஆகியோர் நன்றியை தெரிவித்துள்ளனர். நான் இந்த பதிவை பார்த்து விட்டு குத்தாட்டம் போடுவதாக அஸ்வின் கூறியுள்ளார். மேலும் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த ட்வீட்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…