ரத்த கரையுடன் அருவா.! மிரட்டலாக வெளியான “தலைவர் 169” டைட்டில்..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு….
அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் தான் இயக்குகிறார்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. அதனை தொடர்ந்து படப்பிடிப்பு எப்போது தொடங்கும், படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, நேற்று படத்தின் அப்டேட் இன்று காலை 11-மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது தலைவர் 169 படத்தின் தலைப்பு என்னவென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, படத்திற்கு “ஜெயிலர்” என்று தலைப்பு வைக்கப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியீடப்பட்டுள்ளது. போஸ்டரில் உள்ள அருவாவில் ரத்த கரை, அதற்கு பின்புறம் இருக்கும் இடம் பெரிய சண்டைக்காட்சிகள் நடைபெற்றது போல கட்டப்பட்டுள்ளது. இதனை வைத்து பார்க்கையில் படம் கேங்க் ஸ்டார் படமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கும் என தெரிகிறது.
#Thalaivar169 is #Jailer@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/tEtqJrvE1c
— Sun Pictures (@sunpictures) June 17, 2022