தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் தொடங்கியுள்ளதாக சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து படப்பிடிப்பும் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக முதற்கட்ட படப்பிடிப்பு தேர்தல் முடிந்த பிறகு தொடங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அதன் படி இன்று முதல் படத்திற்கான படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் தொடங்கியுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
#Thalapathy65 shooting has started in Georgia! @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja pic.twitter.com/tuMnc5393k
— Sun Pictures (@sunpictures) April 9, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025