சூரரைப்போற்று இந்தி ரீமேக் படத்தை நடிகர் சூர்யா 2D நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று . இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும், படத்தை அபண்டன்ஷியா என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2D நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிக்கிறார். இதனை சூர்யாவே தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சூர்யா நடித்த மாறா கதாபாத்திரத்தில், நடிகர் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் படத்தில் யார் யார் நடிப்பார்கள் என்பது குறித்த அப்டேட் வெளியீடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…