தனுஷ் படத்தில் இணைந்த இயக்குனர் இமயம்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Default Image

தனுஷின் 44- வது படத்தில் பிரபல இயக்குனரான பாரதி ராஜா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் “மாறன்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷின் 44 வது படத்தை யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், குட்டி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவாஹர் இயக்குகிறார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பதாகவும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இயக்குனர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதி ராஜா இணைந்துள்ளார். இதனை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதம் முதல் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்