ஜூனியர் என்டிஆர் 31 திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு 15 நாட்கள் மீதமுள்ள நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது 38 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 31 வது படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் ஜூனியர் என்டிஆர் 31 வது படத்தை கேஜிஎப் , சலார் போன்ற படங்களை இயக்கிய பிரசாத் நீல் இயங்குவதாகவும், அந்த படத்தை மைதிரி மூவி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளார்கள்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…