உலகளவில் பாதிக்கப்பட்ட 30,64,838 பேரில் 9,22,403 பேர் டிஸ்சார்ஜ்.!

Published by
பாலா கலியமூர்த்தி

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 30,64,838 பேரில் 9,22,403 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து உள்ளார்கள்.

சீனா உஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் அந்நாட்டை புரட்டிப்போட்டது. பின்னர் பரவ தொடங்கிய வைரஸ் சுமார் 200 நாடுகளை தற்போது மிரட்டி வருகின்றது. இதன் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்தாலும் வைரஸின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், உலகளவில் கொரோனா வைரஸில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,22,403 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,64,838 ஆக உள்ள நிலையில், அதில் 9,22,403 பேர் பூர்ண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இதுவரை கொரோனா வைரசுக்கு 2,11,609 பேர் பலியாகியுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 19,30,826 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 56,300 பேர் மோசமான நிலையில் இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விபரங்கள்.

  • அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10,10,507 பேரில்  1,38,990 பேர் குணமடைந்துள்ளார்கள்.
  • ஸ்பெயினில் பாதிக்கப்பட்ட 2,29,422 பேரில் 1,20,832 பேர் குணமடைந்துள்ளார்கள்.
  • இத்தாலியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 1,99,414 பேரில் 66,624 பேர் குணமடைந்துள்ளார்கள்.
  • பிரான்ஸ் நாட்டில் பாதிக்கப்பட்ட 1,65,842 பேரில் 45,513 பேர் குணமடைந்துள்ளார்கள்.
  • ஜெர்மனியில் பாதிக்கப்பட்ட 1,58,758 பேரில் 1,14,500 பேர் குணமடைந்துள்ளார்கள்.
  • துருக்கி 33,791, ஈரான் 70,933, சீனா 77,555, பிரேசில் 31,142, கனடா 18,268, பெல்ஜியம் 10,878, சுவிட்சர்லாந்து 22,200, ஆஸ்திரேலியா 12,362 மற்றும் இந்தியாவில் 6,869 பேர் குணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

8 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

9 hours ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

10 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

12 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

13 hours ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

13 hours ago