உலகளவில் பாதிக்கப்பட்ட 30,64,838 பேரில் 9,22,403 பேர் டிஸ்சார்ஜ்.!
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 30,64,838 பேரில் 9,22,403 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து உள்ளார்கள்.
சீனா உஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் அந்நாட்டை புரட்டிப்போட்டது. பின்னர் பரவ தொடங்கிய வைரஸ் சுமார் 200 நாடுகளை தற்போது மிரட்டி வருகின்றது. இதன் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்தாலும் வைரஸின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உலகளவில் கொரோனா வைரஸில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,22,403 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,64,838 ஆக உள்ள நிலையில், அதில் 9,22,403 பேர் பூர்ண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இதுவரை கொரோனா வைரசுக்கு 2,11,609 பேர் பலியாகியுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 19,30,826 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 56,300 பேர் மோசமான நிலையில் இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விபரங்கள்.
- அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10,10,507 பேரில் 1,38,990 பேர் குணமடைந்துள்ளார்கள்.
- ஸ்பெயினில் பாதிக்கப்பட்ட 2,29,422 பேரில் 1,20,832 பேர் குணமடைந்துள்ளார்கள்.
- இத்தாலியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 1,99,414 பேரில் 66,624 பேர் குணமடைந்துள்ளார்கள்.
- பிரான்ஸ் நாட்டில் பாதிக்கப்பட்ட 1,65,842 பேரில் 45,513 பேர் குணமடைந்துள்ளார்கள்.
- ஜெர்மனியில் பாதிக்கப்பட்ட 1,58,758 பேரில் 1,14,500 பேர் குணமடைந்துள்ளார்கள்.
- துருக்கி 33,791, ஈரான் 70,933, சீனா 77,555, பிரேசில் 31,142, கனடா 18,268, பெல்ஜியம் 10,878, சுவிட்சர்லாந்து 22,200, ஆஸ்திரேலியா 12,362 மற்றும் இந்தியாவில் 6,869 பேர் குணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.