சீனா கண்டுபிடிக்கும் கொரோனா தடுப்பூசியை நாங்கள் வாங்கமாட்டோம் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமடைந்துள்ளது. அதற்கான இறுதி கட்ட சோதனைக்கு விரைந்துள்ளனர். மேலும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.
இன்னும் சில மாதங்களில் இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என உலக நாடுகள் எதிர்பார்த்து உள்ளன. உலக அளவில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை மருத்துவ பரிசோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளன. உலக நாடுகளை தொடர்ந்து, கொரோனா வைரஸை பரப்பிய சீனாவும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்தநிலையில், சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்தை வாங்கப்போவது இல்லை என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் ஒருவர், சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை வாங்க வேண்டாம் என வலியுறித்தி ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த பிரேசில் அதிபர், “நிச்சயமாக, சீனாவின் தடுப்பூசியை வாங்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…