ஒடிசாவில் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக நிரஞ்சன் பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒடிசாவின் சுகாதார அமைச்சர் நபா கிசோர் தாஸ், சுட்டு கொல்லப்பட்டதையடுத்து புதிய சுகாதாரத் துறை அமைச்சராக நிரஞ்சன் பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசாவில் சுகாதாரத்துறை அமைச்சர் சுட்டு கொல்லப்பட்டதையடுத்து ஒடிசாவில் நிதியமைச்சர் நிரஞ்சன் பூஜாரிக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
இவரது நியமனம் முதல்வர் அலுவலகத்தில் ஆளுநர் பேராசிரியர் கணேஷி லாலின் ஒப்புதலுடன், முதல்வர் நவீன் பட்நாயக், நிதியமைச்சர் நிரஞ்சன் பூஜாரிக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையை ஒதுக்கினார். நாடாளுமன்றத்தின் விவகாரத்துறையின் பொறுப்புகளையும் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் நபா தாஸ் மரணம் :
ஒடிசாவில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ், ஜார்சுகுடா மாவட்டத்தின் பிரஜ்ராஜ்நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். நிகழ்ச்சில் கலந்துகொள்ள நபா தாஸ் தனது காரில் இருந்து இறங்கிய போது போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் அவரது மார்பில் சுட்டுள்ளார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில மணி நேரங்களில் மரணமடைந்தார். ஒடிசா கவர்னர் கணேஷி லால், முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் மறைந்த அமைச்சர் நபா கிஷோர் தாஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…