கண் பார்வை என்பது மிக அவசியமான ஒன்று. இந்த கண் பார்வை குறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பு, ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமைகளில் உலக கண் பார்வை தினத்தை அறிவித்துள்ளது.
மனிதர்கள், மிருகங்கள் என அனைத்திற்கும் மிக அவசியமான ஒன்று, கண் பார்வை. கண் பார்வையின்மை, பார்வைக்குறைபாடு உள்ளிட்டவை பற்றி உலக அளவில் அறிவதற்காகவும், பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமைகளில் உலக சுகாதார அமைப்பு, உலக கண் பார்வை தினம் என அறிவித்தது.
அதன்படி இந்தாண்டு அக்டோபர் 8 ஆம் தேதி “உலக பார்வை தினம்” உலகளவில் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தன்று கண்களின் முக்கியத்துவம் குறித்த பல கருத்தரங்குகள், ம், பார்வை இழப்பு குறித்த விழிப்புணர்வுகளும் நடத்தப்படும். மேலும், பல இடங்களில் கண்தானம் செய்யகோரிய பதாகைகளும், அதுகுறித்த மக்களிடையே ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
மேலும், உலகளவில் 285 மில்லியன் பேருக்கு பார்வைக்குறைபாடு உள்ளதாகவும், 246 மில்லியன் பேர் மிககுறைவான பார்வை திறனோடும், 39 மில்லியன் பேர் பார்வையில்லாமலும் வருகின்றனர். அதில் பார்வைக்குறை உள்ளவர்களில் சுமார் 90 சதவீத பேர், குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பத்தில் இருக்கின்றனர்.
மனிதர்களாகிய நாம், சராசரியாக நிமிடம் ஒன்றுக்கு 12 முறை இமைக்கின்றோம். நமது கண்கள் சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு 36,000 பைட் தகவல்களை கையாள்கிறது. கண்களில் இமைகளில் உள்ள முடிகளின் ஆயுள் காலம், 5 மாதங்கள் மட்டுமே. அதுமட்டுமின்றி, நமது கண்விழிகள் ஒரு நொடியில் 50 பொருட்களை பாதிப்பதாக நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்பொழுது கொரோனா பரவிவரும் சூழலில், உலக கண் பார்வை தினத்தையொட்டி பல்வேறு போட்டிகள் ஆன்லைனில் நடத்தப்படவுள்ளது. அதுமட்டுமின்றி, மக்கள் இதுகுறித்து தங்களின் கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து பரப்பிக்கொண்டே வருகின்றனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…