விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் இணையும் ‘ஓ மை கடவுளே’ பட நடிகை.!
விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் ரித்திகாசிங் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார்.நேற்றைய தினம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிச்சைக்காரன் 2 படத்தின் டைட்டில் போஸ்ட்ர் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை தேசிய விருதை வென்ற பிரியா கிருஷ்ணாசாமி இயக்குகிறார்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கும் திரைப்படங்களில் ஒன்றினை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பூஜா அவர்கள் நடிப்பில் வெளியான ‘விடியும் முன்’ என்ற படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமான பாலாஜி குமார் இயக்கும் ஒரு படத்தில் விஜய் ஆண்டனி கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தில் ரித்திகாசிங் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதனை ரித்திகாசிங் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வெளிப்படுத்தியுள்ளார்.
So happy to be associated with this team ❤️#HBDVijayAntony #DirBalajiKumar pic.twitter.com/DJQiqMKPFD
— Ritika Singh (@ritika_offl) July 24, 2020