எத்தனை ரஷ்ய படைகள் வந்தாலும் இதுதான் பதில் – உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!

உக்ரைன் மீது தொடர்ந்து 55-வது நாளாக ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்நிலையில்,உக்ரைனின் கிழக்கு பகுதியைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் முயல்வதாகவும்,எத்தனை ரஷ்ய படைவீரர்கள் வந்தாலும்,நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,வீடியோ வெளியிட்டுள்ள ஜெலென்ஸ்கி:”ரஷ்யப் படைகள் டான்பாஸிற்கான போரைத் தொடங்கிவிட்டன,அதற்காக அவர்கள் நீண்ட காலமாகத் தயாராகி வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் கணிசமான அளவு ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டு தாக்குதலை நடத்த கவனம் செலுத்துகின்றன.
ஆனால்,அவர்கள் எத்தனை ரஷ்ய படைவீரர்களை அந்தப் பகுதிக்குள் கொண்டு வந்தாலும்,நாங்கள் தொடர்ந்து போராடுவோம்,பாதுகாப்போம், நாங்கள் இதை தினமும் செய்வோம்.உக்ரைனின் எந்த பகுதியையும் நாங்கள் கைவிட மாட்டோம்,ஆனால் எங்களுடையது அல்லாத எதுவும் எங்களுக்குத் தேவையில்லை”,என்று கூறியுள்ளார்.
இதனிடையே,ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனை வெற்றியாளராக அமெரிக்கா பார்க்க விரும்புவதாகவும்,பென்டகன் அதற்கான அனைத்தையும் செய்து வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
Russian forces start battle for Donbas: Zelenskyy
Read @ANI Story | https://t.co/F5eoDFrOVX#Donbas #RussiaUkraineWar #Ukraine #Zelenskyy pic.twitter.com/LTf2fvr0cN
— ANI Digital (@ani_digital) April 19, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
“ஷமி விளையாடிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை!” கங்குலி ஓபன் டாக்
February 21, 2025