வயதுக்கு வந்த பெண்களுக்கான ஊட்டச்சத்து மிகு உணவுகள்…!

Default Image

 

இந்த சமயத்தில் முழு உளுந்துல் செய்த பலகாரங்களை நிறைய சாப்பிடக் கொடுக்கண வேண்டும். அவ்வளவும் சக்தி! அதனாலதான் அந்தக் காலத்துல சின்னப் பெண்களுக்கு அப்பப்போ உளுத்தங்களி செஞ்சு கொடுப்பாங்க! இடுப்பெலும்புக்கு பலம் சேர்க்கற அருமையான உணவு இது. சாப்பிடவும் ருசியா இருக்கும்!

சரி, உளுத்தங்களி எப்படி செய்வோம், தெரியுமா?

ஒரு டம்ளர் முழு உளுந்துக்கு கால் டம்ளர் பச்சரிசி எடுத்துக்கணும். முழு உளுந்தை களைஞ்சு உலர வெச்சு, வெறும் வாணலில வாசனை வர வறுத்து வச்சுக்கணும். அரிசியையும் இதேபோல தனியா வறுத்துக்கணும். ரெண்டையும் சேர்த்து மிஷின்ல கொடுத்து மாவா அரைச்சுக்கணும் (மிக்ஸில அரைச்சா நல்லா சலிச்சு எடுத்துக்குங்க. அந்தக் காலத்துல நாங்க வீட்டிலயே ‘எந்திரத்துல’ பிடிப்பிடியா போட்டு அரைச்சுப்போம்).
அப்புறம், அரைச்ச இந்த உளுந்து மாவுல திட்டமா தண்ணி கலந்து, வாணலில ஊற்றி, கைவிடாம கிளறணும். இன்னொரு பாத்திரத்துல ஒரு டம்ளர் வெல்லம் போட்டு, பாகு காய்ச்சிக்கணும்.

களி வெந்து வர்ற சமயத்துல தாராளமா ஒரு கை நெய் ஊத்தி, கூடவே, பாகையும் சேர்த்துப் போட்டு கிளறணும். கமகமனு களி வாசனை ஊரைக் கூட்டும். இறக்கி வச்சு சாப்பிடறப்ப இன்னும் ரெண்டு ஸ்பூன் நெய் ஊத்திக்கிட்டா, அவ்வளவு ருசியா இருக்கும்.

நெய்யைவிட நல்லெண்ணெய் சேர்த்து செஞ்சா இந்த களிக்கு இன்னும் ஊட்டம் அதிகம். அதேபோல வெல்லத்துக்குப் பதிலா கருப்பட்டி சேர்த்துக்கலாம்.

அரைச்சு வந்த இதே உளுந்து மாவுல வெல்லம் தூளாக்கிப் போட்டு, சூடா நெய் விட்டு உருண்டை பிடிச்சும் சாப்பிடலாம். பெண்குழந்தை வயசுக்கு வந்து ஒரு வருஷம் வரையாவது வாரத்துக்கு மூணு நாள் உளுத்தங்களி சாப்பிட்டா, பின்னால பிரசவ சமயத்துல சிசேரியன் அது இதுங்கற பேச்சே இருக்காது. சுகப்பிரசவம் சுபமா ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்