பெய்ரூட் வெடிப்பு அதிர்விலிருந்து பிறந்த மூன்று குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்
பெய்ரூட் வெடிப்பு அதிர்விலிருந்து செவிலியர் பிறந்த மூன்று கைக்குழந்தைகளை காப்பாற்றினார்.
நேற்று லெபனானில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் நேற்று காலை வரை 70 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது, 100 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 4,000- க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விபத்து இதனால் நடந்தது என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.
இந்த வெடிப்பு 10 கி.மீ தூரத்திற்கு அதிர்ச்சி அலைகளை ஏற்பட்டதால் கட்டிடங்கள் அதிர்ந்தன. சமூக ஊடகங்களில் வெளிவந்த குண்டுவெடிப்பின் பயங்கரமான காட்சிகள் கட்டிடங்கள் அதிர்வதை காட்டியது.
அந்த அவகையில் ஒரு புகைபடம் வைரலாகி வருகிறது. பெய்ரூட் வெடிப்பில் அதிர்வு ஏற்பட்டு அருகில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் கண்ணாடித் துண்டுகள் உடைந்து காணப்படுகிறது. அதன், உள்ளெ கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நீல நிற ஸ்க்ரப் மற்றும் பாதுகாப்பு முக்கவசம் அணிந்துள்ள செவிலியர் அதிர்விலிருந்து புதிதாகப் பிறந்த மூன்று பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றினார். ஆனால் இந்த மருத்துவமனையில் வெடிப்பு அதிர்வால் சில காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
This is a powerful picture.
A nurse, answering calls, holding 3 newborn babies in a hospital full of damage & glass and among dead bodies.
This breaks my heart. ????#Beirut#prayforbeirut #LebanonExplosion #lebanon #علقوا_المشانق #كلن_يعني_كلن #لبنان pic.twitter.com/8woJjMuPd1— ???????????? (@AlaaH28) August 5, 2020