கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த செவிலியர் நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் கைது செய்யபப்ட்டுள்ளார்.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ள கமலா ஹாரிஸுக்கு ஒரு செவிலியர் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், அந்த செவிலியரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்க புலனாய்வு தகவல்படி 39 வயதான செவிலியர் நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.புளோரிடாவிலிருந்து நிவியன் கைது செய்யப்பட்டார்.
சிறையில் உள்ள தனது கணவருக்கு ஃபெல்ப்ஸ் ஒரு கணினி செயலி மூலம் கமலா ஹாரிஸைக் கொள்ளப்போவதாக வீடியோக்களை அனுப்பியிருந்தார். இந்த செயலி கைதிகளுடன் குடும்பங்களை இணைக்க உதவுகிறது. சிறையில் உள்ள தனது கணவருக்கு வீடியோ மூலம் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு எதிராக அவர் வெறுக்கத்தக்க வார்த்தைகளை அனுப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட செவிலியர் “நான் உன்னை துப்பாக்கியால் கொல்லப் போகிறேன், நீ இறக்கப் போகிறாய்” என கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல் விடுத்து சிறையில் உள்ள தனது கணவருக்கு வீடியோ அனுப்பி உள்ளார்.
இந்த வழக்கு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியுடன் தொடர்புடையது என்பதால் இந்த வழக்கை புலனாய்வு அமைப்பிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…