ராணுவ வீரர்கள் முன் மண்டியிட்ட கன்னியாஸ்திரி…! நடந்தது என்ன…? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!
கன்னியாஸ்திரி ஆன் ரோஸ் நூ என்பவர் போலீசாரிடம் மண்டியிட்டு கைகூப்பி, குழந்தைகளுக்கு எதிராகவும், குடியிருப்புவாசிகளுக்கு எதிராகவும் துப்பாக்கிகளை நீட்டாதீர்கள்.
மியான்மரில் கடந்த 1-ம் தேதி ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து, இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து மக்கள் தீவிரமாக போராடிவருகிறார்கள். இந்த நிலையில் முக்கிய நகரங்களில் ஜனநாயக ஆதரவாளர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற இந்த போராட்டமானது, வன்முறை போராட்டமாக மாறி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கன்னியாஸ்திரி ஆன் ரோஸ் நூ என்பவர் போலீசாரிடம் மண்டியிட்டு கைகூப்பி, குழந்தைகளுக்கு எதிராகவும், குடியிருப்புவாசிகளுக்கு எதிராகவும் துப்பாக்கிகளை நீட்டாதீர்கள் என்று மண்டியிட்டு கெஞ்சுவது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கன்னியாஸ்திரி அவர்கள் கூறுகையில், அவர் மண்டியிட்டு வேண்டிக்கொண்ட அடுத்து சில மணிகளில், துப்பாக்கி சத்தம் கேட்க தொடங்கியதாகவும், அந்த இடம் ரத்தம் படிந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.