அணு ஆயுத மும்முனை படைகள் தயார் – ரஷ்ய அதிபர்
தரைவழி,நீர்மூழ்கி கப்பல் வழி மற்றும் விமானங்கள் வழி என அணு ஆயுத மும்முனை படைகள் தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த 5 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.எனினும்,பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில், அண்டை நாடான பெலாரஸ்-இல் சில நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நேற்று ரஷ்யா விடுத்த அழைப்பை முதலில் நிராகரித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,அதை இன்று ஏற்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்று மதியம் இருநாடுகளுக்கும் இடைய பேச்சுவார்த்தை நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில், உடனடியாக போர் நிறுத்த வேண்டும், அதேபோல ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற உத்தரவிட வேண்டும் என அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் தரப்பில் வலியுறுத்தியிருந்த, நிலையில், தரைவழி, நீர்மூழ்கி கப்பல் வழி மற்றும் விமானங்கள் வழி என அணு ஆயுத மும்முனை படைகள் தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.