முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ஆர் மகள் திடீர் தற்கொலை.! சோகத்தில் தெலுங்கு திரையுலகம்.!
மறைந்த முன்னாள் ஆந்திர முதலமைச்சர் என்.டி.ஆர் மகள் உமா மகேஸ்வரி ஹைதிராபாத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
முன்னாள் ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு உலகின் எம்.ஜி.ஆருமான என்.டி.ராமராவ் அவர்களுக்கு மொத்தம் 12 குழந்தைகள். அதில் ஒரு பெண் குழந்தை தான் உமா மஹேஸ்வரி.
இவர் ஹைதிராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இவரது மறைவு என்.டி.ஆர் குடும்பத்தை மட்டுமின்றி பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மூத்த அண்ணன் தான் தெலுங்கு முன்னணி நடிகர் பாலையா என அழைக்கப்டும் பாலகிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.