இனி கெத்தாக புல்லேட்டில் சென்று அய்யப்பனை வழிபடலாம்.. எப்படி அது..!
சபரிமலைக்கு வருவோரின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, பக்தர்களுக்கு வாடகை பைக் வழங்கும் சேவையை தெற்கு ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்த சேவையை கடந்த நவம்பர் 26ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவிலுள்ள செங்கண்ணூர் ரயில் நிலையம் முதல் சபரிமலை பம்பா ஆறு வரை பைக்கில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதை தொடர்ந்து, வாடகை பைக் சேவையை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவை மூல, ஒருநாள் முழுவதும் பைக்கை பயன்படுத்த விரும்புவோருக்கு ரூ. 1200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த பைக்குகளை பெறுவோர் 200 கி.மீ மேல் செல்லக்கூடாது. அதனை மீறினால், கூடுதலாக ஒவ்வொரு கி.மீ-க்கும் ரூ. 6 கட்டணமாக வசூலிக்கப்பட்டும். மேலும் ஒருநாளுக்கு மேல் ஒரு மணிநேரம் கடந்தால் கூட, பைக் வாடகை பெற்றவர்கள் ரூ. 100 கூடுதலாக செலுத்த வேண்டும்.
இதுதொடர்பாக மேலும் தகவல்களை வெளியிட்ட திருவனந்தபுரம் ரயில்வே பிரிவு முதன்மை அதிகாரி பாலமுரளி, கொச்சி காஃபிரைட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மேலும் பல நிறுவனங்களும் வாடகைக்கு பைக்குகளை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன. இதனால் திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே, எர்ணாகுளம், ஆலப்புழா, திரிசூர், கோட்டாயம் போன்ற கேரளாவின் முதன்மையான மாவட்டங்களில் வாடகை பைக்குகள் கிடைக்கும் திட்டம் தொடங்கப்படும் என்று கூறினார்.