இனிமேல் இரவில் ஈசியாக சப்பாத்தி குருமா செய்யலாம், இரண்டே நிமிடம் தான்!
சப்பாத்தி என்றாலே குருமா தான் அதனுடன் சாப்பிடுவதற்கு சரியான ஒன்றாக இருக்கும். ஆனால், குருமா செய்வது கடினம் போல தோன்றும். இனி இரண்டே நிமிடத்தில் செய்யலாம் குருமா, எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு
- வெங்காயம்
- தக்காளி
- மிளகாய்
- கடலை மாவு
- உப்பு
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை நான்கு துண்டுகளாக நறுக்கி அதனை நன்றாக அவிய வைக்கவும். அதன் பின் அதை தோலுரித்து எடுத்து வைத்து கொள்ளவும். பின் கரண்டி அல்லது கைகளால் லேசாக மசித்து விடவும். அதன் பின் ஒரு தேக்கரண்டி அளவுக்கு கடலை மாவு எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கலந்து வைத்து கொள்ளவும்.
பின் அடுப்பில் சட்டியை வைத்து கடுகு, கருவேப்பில்லை போட்டு தாளித்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். லேசாக வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து வதக்கி அதற்க்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்கு வதங்கியதும் லகேசக மஞ்சள் தூள் சேர்த்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்க்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். கொதி வந்ததும் கரைத்து வைத்துள்ள கடலை மாவை ஊற்றி லேசாக சூடேறியதும் கெட்டியான பதத்தை அடையும், அதன் பின் இறக்கினால் அட்டகாசமான சப்பாத்தி குருமா தயார்.