குரங்குகளுக்கு இடையே நோவாவாக்ஸின் தடுப்பூசி கொடுக்கப்பட்டு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கவுண்டி டர்ஹாமில் உள்ள புஜிஃபிலிம் டையோசிந்த் பயோடெக்னாலஜியால் தயாரிக்கப்பட்டுள்ள நோவாவாக்ஸ் தடுப்பூசியின் முதல்கட்ட பரிசோதனையானது எலிகள் மீது நடத்தப்பட்டு வெற்றியடைந்தது. அதன் பின் ரீசஸ் மாகேக் என்ற குரங்குகளுக்கு இரண்டு டோஸ் அளவில் தடுப்பூசி கொடுக்கப்பட்டது.
அதன் மூலம் குரங்குகளுக்கு இடையே கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தியதாகவும், தடுப்பூசி குரங்குகளுக்கிடையே செயல்படுவதாகவும் சோதனையில் தெரியவந்துள்ளதாக நோவாவாக்ஸின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தலைவர் டாக்டர் கிரிகோரி க்ளென் கூறினார். மேலும் இந்த தடுப்பூசி மனிதர்களுக்கிடையேயும் கொரோனா நோய் பரவுவதை தடுக்க உதவும் என்ற நம்பிக்கையை அளிப்பதாகவும் கூறினார்.
இந்த தடுப்பூசி மனிதர்களிடையேயும் கொரோனாவை தடுக்குமா என்று ஆய்வை மேற்கொள்ள போவதாகவும், அவை வெற்றியை கண்டால் கொரோனா தொற்றை கட்டுபடுத்த முடியும். மேலும் மனிதர்கள் போலின்றி குரங்குகளுக்கு கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளது. மேலும் இந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடமும், குரங்குகளிடமும் செயல்படும் முறையில் பல வேறுபாடுகள் இருப்பதாகவும் க்ளென் எச்சரித்தார். அடுத்தக் கட்டமாக இந்த நோவாவாக்ஸின் தடுப்பூசி மனிதர்களிடம் சோதனை நடத்தப்பட உள்ளது. அதன்படி இங்கிலாந்தில் உள்ள அனைவருக்கும் நோவாவாக்ஸின் தடுப்பூசிக்கான பரிசோதனை செய்யப்படவுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…