விம்பிள்டன் இறுதிப்போட்டியில் நோவாக் ஜோகோவிச் போராடி வெற்றி ! 5 முறை பட்டம் வென்று சாதனை
விம்பிள்டன் இறுதிப்போட்டியில் நோவாக் ஜோகோவிச் போராடி வென்றார்.
இந்த முறை விம்பிள்டன் இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் மற்றும் சுவிசர்லாந்தின் ரோஜர் பெடரர் மோதினார்கள்.பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
15 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 4 விம்பிள்டன் பட்டங்களையும் வென்றவர் நோவாக் ஜோகோவிச் .இந்த போட்டியில் வென்றதன் மூலமாக நோவாக் ஜோகோவிச் 5-வது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ரோஜர் பெடரர் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 8 முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.