திருமண வாழ்வில் தொடர விருப்பமில்லை … பில்கேட்ஸ் தம்பதிகள் அறிவிப்பு!

Published by
Rebekal

உலகின் மிகப்பெரிய பணக்கார ஜோடிகளான பில்கேட்ஸ் தம்பதிகள் தற்பொழுது விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

உலகின் முதல் பணக்காரர் என அறியப்பட கூடியவர் தான் பில்கேட்ஸ். இவருக்கு தற்போது 65 வயதாகிறது. உலகின் மிகப்பெரிய மதிப்புள்ள நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கிய இவர், கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னதாக 1987 ஆம் ஆண்டு மெலிண்டா கேட்ஸ் அவர்களும், பில்கேட்ஸ் ஆகிய இருவரும் சந்ததி கொண்டனர்.  அதன் பின் 1994 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். பின் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் அவர்களது பெயரில் ஒரு அறக்கட்டளை ஒன்றை துவங்கினார். இந்த தொண்டு நிறுவனம் மூலமாக உலகெங்கிலுமுள்ள பலருக்கு இருவரும் இணைந்து உதவி செய்து வருகின்றனர்.

தற்பொழுதும் மெலிண்டா கேட்ஸ் பெயரில் நிறுவப்பட்ட அறக்கட்டளை மூலமாக பலருக்கு சேவைகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், 27 வருட வாழ்விற்குப் பின்பதாக தற்பொழுது பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஆகிய இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக பில்கேட்ஸ் தம்பதியினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 27 ஆண்டுகளில் தாங்கள் மூன்று குழந்தைகளை வளர்த்து உள்ளதாகவும், உலகம் முழுவதிலும் பரந்து செயல்படக்கூடிய அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதன் மூலம் பலருக்கு சுகாதாரமாக வாழ்வதற்கான வழிகள் செய்து தரப்பட்டுள்ளது ஆகவும் தெரிவித்துள்ளதுனர்.

தற்பொழுதும் இந்த பணியில் தாங்கள் இணைந்து தொடர போவதாக தெரிவித்துள்ளனர். இருந்தாலும் தங்களது திருமண வாழ்வை முடித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், வாழ்வின் அடுத்த கட்டத்தில் தாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து தம்பதியாக வாழ்வது தங்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். முதிர்ந்த தம்பதிகளாக இருவரும் இணைந்து தற்பொழுது தங்கள் விவாகரத்து முடிவை வெளியிட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதோ அவர்களின் விவாகரத்து அறிவிப்பிற்கான பதிவு,

Published by
Rebekal

Recent Posts

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…

7 hours ago

கருப்பு பெயிண்ட் அடிக்கிற முன்னாடி ஸ்கூல் போய் படிச்சிட்டு வாங்க…அண்ணாமலை பேச்சு!

சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…

7 hours ago

சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!

டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…

9 hours ago

AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!

ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான  சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…

10 hours ago

எடுத்தது ஒரு விக்கெட் எதுக்கு இந்த சீன்? அப்ரார் அகமதை விளாசிய வசீம் அக்ரம்!

துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…

10 hours ago

மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!

சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…

11 hours ago