நண்பர்களை பற்றி நீங்கள் இப்படி கூறக்கூடாது – ஜோ பைடன்
காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை உங்களை போன்று தீர்க்கக் கூடாது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும், குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம்.அதன்படி முதல் மற்றும் மூன்றாவது விவாதம் நடைபெற்று முடிந்துள்ளது.இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டது.
அண்மையில் நடைபெற்ற மூன்றாவது விவாதத்தில் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வந்தனர். அந்தவகையில் டிரம்ப் பேசுகையில், சீனா,ரஷ்யா,இந்தியா ஆகிய நாடுகள் காற்று மாசுபாடு காரணமாக அசிங்கமாக இருக்கிறது என்றார்.டிரம்பின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், நண்பர்களை பற்றி நீங்கள் இப்படி கூறக்கூடாது.காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை உங்களை போன்று தீர்க்கக் கூடாது. நானும், கமலா ஹாரிஸும் நட்பு நாடுகளுடனான எங்கள் உறவை ஆழமாக மதிக்கிறோம்.நமது வெளியுறவுக் கொள்கையில் மரியாதை செலுத்துவோம் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
President Trump called India “filthy.”
It’s not how you talk about friends—and it’s not how you solve global challenges like climate change.@KamalaHarris and I deeply value our partnership—and will put respect back at the center of our foreign policy. https://t.co/TKcyZiNwY6
— Joe Biden (@JoeBiden) October 24, 2020