அண்மையில் வெளியாகிய துக்ளக் தர்பார் படத்தின் டீசர் நாம் தமிழர் கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தற்போது சீமானிடம் தான் நேரடியாக பேசியதாக பார்த்திபன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராசி கண்ணா,சம்யுக்தா மற்றும் சில முக்கியமான நடிகர்களும் இணைந்து நடித்து இருக்கக்கூடிய துக்ளக் தர்பார் எனும் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது. இந்த படத்தில் ராசிமான் எனும் பெயருடன் அரசியல்வாதியாக நடித்திருக்க கூடிய பார்த்திபனின் கட்சி போஸ்டர்களை சிலர் கிழிப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த ராசிமான் என்ற பெயர் நாம் தமிழர் கட்சி தலைவராகிய சீமானை குறிப்பதாகவும் இது தங்களுக்கு வருத்தம் அளிப்பதாகவும் நாம் தமிழர் கட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நடிகரும் இயக்குனரும் ஆகிய பார்த்திபன் அவர்கள் சீமானை சந்தித்து நேரில் இது குறித்து பேசியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் நண்பர் சீமான் அவர்களிடம் நேரடியாக துக்ளக் தர்பார் குறித்து விளக்கம் அளித்து விட்டேன் எனவும், பெருந்தன்மையாக அவரும் பதில் அளித்ததாகவும் ராசிமான் எனும் பெயர் சீண்ட வேண்டும் என்று வைக்கப்பட்டது அல்ல, அவ்வாறு இருந்திருந்தால் நானே அதற்கு இடம் தந்திருக்க மாட்டேன். ஏனென்றால் இந்நிமிடம் வரையிலும் நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல எனவும் கூறியுள்ளார். மேலும் அயராது உழைத்து தங்கள் இலட்சிய இலக்கை அடைய போராடக்கூடிய நாம் தமிழர் தோழர்களின் முயற்சிகளை கிண்டல் செய்ய நான் இடம் தர மாட்டேன் எனவும், உள் நோக்கமின்றி நடந்த பெயர் பிரச்சனையை இயக்குனரிடம் கூறி ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன் எனவும் கூறி உள்ளதாக தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…