கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக உக்ரைன்-ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், உக்ரைனில் இருந்து இதுவரை 3.3 மில்லியன் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், போர் நிறுத்தத்திற்கான எந்த முடிவும் எட்டப்படவில்லை.
குவாட் நாடுகள் எதிர்ப்பு
உலக நாடுகள் ரஷ்யா, உக்ரைன் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், குவாட் நாடுகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. குவாட் நாடுகள் என்பது இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் கொண்ட வலுவான கூட்டமைப்பாகும். இந்த நான்கு நாடுகளில் ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் ரஷ்யாவின் நிலைப்பாட்டிற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ரஷ்யாவிற்கு கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இந்தியாவின் நிலைப்பாடு
குவாட் நாடுகள் அமைப்பில் உள்ள மற்ற நாடுகளின் நிலைப்பாட்டிற்கு மாறாக, இந்தியா உக்ரைனையும் ஆதரிக்காமல், ரஷ்யாவையும் ஆதரிக்காமல் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மேலும் ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எண்ணெய் வாங்கும் முடிவையும் இந்தியா துணிச்சலாக மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் இந்த முடிவு, குவாட் அமைப்புகளுக்கு மத்தியில் முறிவை ஏற்படுத்த கூடுமோ என்ற எண்ணம் எழுந்துள்ளது.
இந்தியாவின் நிலைப்பாட்டை மதிக்கிறோம்
இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஆஸ்திரேலியாவின் உயர் கமிஷனர் பேரி ஓ பேரல் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவின் நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கிறோம். அதனை மதிக்கிறோம். எல்லா நாடுகளும் ஒரே மாதிரியான உறவில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியான வெளியுறவுக் கொள்கை உள்ளது. பிரதமர் மோடி ஏற்கனவே இந்த போர் நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். இதுவே நல்ல விஷயம் தான் இதனால் இந்தியாவின் நிலைப்பாட்டை நாங்கள் எதிர்க்க வேண்டிய அவசியம் கிடையாது என தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்றவுடன் ஹைதராபாத் அணி வழக்கம் போலவே அதிரடி தான் காண்பிக்கப்போகிறோம் என்பது போல பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தர்பார் படத்தின் தோல்வியை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் எனும் திரைப்படத்தை இயக்கினார்.…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
சென்னை : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான…
மும்பை : ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணிக்கு இந்த நிலைமையா? என ஆச்சரியப்பட வைக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…