எல்லா நாடுகளும் ஒரே மாதிரியான உறவில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை – ஆஸ்திரேலியா உயர் கமிஷனர்

Default Image

கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக உக்ரைன்-ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், உக்ரைனில் இருந்து இதுவரை 3.3 மில்லியன் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு  சென்றதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், போர் நிறுத்தத்திற்கான எந்த முடிவும் எட்டப்படவில்லை.

குவாட் நாடுகள் எதிர்ப்பு 

உலக நாடுகள் ரஷ்யா, உக்ரைன் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், குவாட் நாடுகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. குவாட் நாடுகள் என்பது இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் கொண்ட வலுவான கூட்டமைப்பாகும். இந்த நான்கு நாடுகளில் ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் ரஷ்யாவின் நிலைப்பாட்டிற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ரஷ்யாவிற்கு கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இந்தியாவின் நிலைப்பாடு 

குவாட் நாடுகள் அமைப்பில் உள்ள மற்ற நாடுகளின் நிலைப்பாட்டிற்கு மாறாக, இந்தியா உக்ரைனையும் ஆதரிக்காமல், ரஷ்யாவையும் ஆதரிக்காமல் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மேலும் ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எண்ணெய் வாங்கும் முடிவையும் இந்தியா துணிச்சலாக மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் இந்த முடிவு, குவாட் அமைப்புகளுக்கு மத்தியில் முறிவை ஏற்படுத்த கூடுமோ என்ற எண்ணம் எழுந்துள்ளது.

இந்தியாவின் நிலைப்பாட்டை மதிக்கிறோம் 

இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஆஸ்திரேலியாவின் உயர் கமிஷனர் பேரி ஓ பேரல் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவின் நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கிறோம். அதனை மதிக்கிறோம். எல்லா நாடுகளும் ஒரே மாதிரியான உறவில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியான வெளியுறவுக் கொள்கை உள்ளது. பிரதமர் மோடி ஏற்கனவே இந்த போர் நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். இதுவே நல்ல விஷயம் தான் இதனால் இந்தியாவின் நிலைப்பாட்டை நாங்கள் எதிர்க்க வேண்டிய அவசியம் கிடையாது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்