உடல்நலக்குறைவால் உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் உயிரிழப்பு!
கென்யாவில் உள்ள ஒ.எல். பெஜேட்டா வன உயிர்காப்பாகத்தில் (ol pejata conservancy) 45 வயதான சூடான் என்று பெயரிடப்பட்ட (sudan) வெள்ளை ஆண் காண்டாமிருகம் பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த காண்டாமிருகத்துக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்த நிலையில், நேற்று காண்டாமிருகம் உயிரிழந்ததாக வன உயிரின காப்பகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வகையைச் சேர்ந்த இரு பெண் காண்டாமிருகங்கள் மட்டுமே உயிருடன் உள்ள நிலையில், செயற்கை கருத்தரித்தல் மூலம் மட்டுமே இந்த வகை காண்டாமிருகங்களை இனி மீண்டும் உருவாக்கமுடியும் என தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.