வடகிழக்கு நைஜீரியா படுகொலை – 110 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா தகவல்!
கடந்த வாரம் நைஜீரியாவில் கடத்தப்பட்ட போகோ ஹராம் குழு தாக்குதலில் 110-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டின் ஐநா மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தின் மீது போகோ ஹராம் ஜிகாதி குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நெல் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த கோர்ஷா எனும் கிராமத்தில் உள்ள விவசாயிகள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 110 அப்பாவி பொதுமக்களும் கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டின் ஐநா மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து கூறிய அவர் 43 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சுட்டிக்காட்டப்பட்ட இந்த தாக்குதலில் சம்பவம் நடந்த அன்று 70க்கும் மேற்பட்டோர் இறந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொடூரமான மற்றும் புத்தி இல்லாத தாக்குதல் நீதிக்கு எதிரானது எனவும் தான் கருதுவதாக தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மட்டுமல்லாமல் தொழில் தேடி வடகிழக்கு நைஜீரியாவில் பயணம் செய்தவர்கள் சிலர் மீதும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் 6 பேர் காயமடைந்ததாகவும் 8 பேர் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.