வட கொரிய அதிபருக்கு உயரிய விருது வழங்கிய ரஸ்யா…
உலகின் வல்லரசு நாடுகள் பல இரு அணியாக பிரிந்து நடத்திய இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்து 75 வது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதனையொட்டி ரஷ்யா பெற்ற வெற்றிய நினைவு கூற வெற்றி தினமாக இதை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், இந்த தினத்தையொட்டி வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு ரஷ்யா விருது வழங்கி கவுரவித்தது. அதாவது, இரண்டாம் உலகப்போர் 1939-ம் ஆண்டு தொடங்கி 1945ஆம் ஆண்டு முடிந்தது. இந்த போரின் போது வடகொரியாவில் ஏராளமான ரஷ்ய வீரர்கள் பலியாயினர். வடகொரியா மண்ணில் பலியான தங்கள் நாட்டு வீரர்களை கவுரவிக்கும் விதமாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு ரஷ்யா உரிய விருதினை வழங்க முடிவு செய்தது. இதனையடுத்து வடகொரியா தலைநகர் பியாங்யாங்க் நகரில் நடந்த விருது வழங்கும் விழாவில், வடகொரியாவிற்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் பங்கேற்று அந்த விருதினை வடகொரிய அதிபருக்கு வழங்கினார். அதில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ரி சாங் ஹூவான் அந்த விருதை பெற்றுக்கொண்டார்