கொரியாவில் கொரோனாவே கிடையாது அதிபர் கிம் ஜங் -ஷாக்கில் சர்வதேசம்
நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்து உலக நாடுகளை அதிர்ச்சியாக்கியுள்ளார்.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் உலகையே அச்சிறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.இது தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. இத்தகைய கொடிய வைரஸ் 3 கோடிக்கும் அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்றுக்கு இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா விவகாரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகளே கோட்டைவிட்டு, தடுமாறி வரும் நிலையில், தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்து உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.வடகொரியாவின் ஆளும் கட்சியின் 75வது ஆண்டு விழாவானது.இவ்விழாவை கொண்டாடும் வகையில் அந்நாட்டின் தலைநகரில் ராணுவ அணுவகுப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அந்நாட்டு அதிபர் கிம் ஜங் உன், வடகொரியாவை சேர்ந்த எவருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை. வைரஸ் பரவலை தடுக்க உதவிய ராணுவத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். வட கொரியாவில் யாருக்கும் கொரோனா பரவவில்லை என்று தெரிவித்து வரும் அதிபர் கிம் வெளியிட்ட தகவலின் உண்மைத்தன்மை மிகுந்த கேள்விக்குறியானது என்று தென்கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.