தென் கொரியாவின் யோன்பியோங் தீவு அருகே இன்று காலை வட கொரியா 200 க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசியுள்ளது. இதனையடுத்து, யோன்பியோங் தீவில் உள்ள பொதுமக்களை உடனடியாக வெளியேறுமாறு தென் கொரியா கேட்டுக் கொண்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென் கொரிய இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக யோன்பியோங் கிராம அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
வட கொரியா தாக்கிய குண்டுகளால் தென் கொரியாவில் எந்த சேதமும் ஏற்படவில்லை. மேலும், அந்த குண்டுகள் இரண்டு கொரியாக்களுக்கு இடையே உள்ள நடைமுறை கடல் எல்லையான வடக்கு எல்லைக் கோட்டிற்கு (NLL) வடக்கே விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 103-ஆக உயர்வு..!
மேலும், இந்த தாக்குதல் குறித்து தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், இந்த தாக்குததால் எங்கள் மக்களுக்கோ அல்லது இராணுவத்திற்கோ எந்த சேதமும் இல்லை, இது கொரிய தீபகற்பத்தின் அமைதியை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இந்த பதற்றமான சூழ்நிலைக்கு வட கொரியா மட்டுமே பொறுப்பு, மேலும் அதை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளது.
இந்தோனேசியாவில் ரயில் விபத்து! 3 பேர் பலி…28 பேர் காயம்!
இதற்கிடையில், சர்வதேச அளவில் தங்களை சக்தி வாய்ந்த நாடாக கருத வட கொரியா பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. இந்த ஏவுகணை சோத்தனியானது தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு புகைச்சலை உண்டு செய்துள்ளது என்றே கூறபடுகிறது.
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…
வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…