புத்தாண்டிலும் ஏவுகணை சோதனை.! அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க வட கொரிய அதிபர் கிம் அதிரடி உத்தரவு.!
நேற்று புத்தாண்டு தினத்திலும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
தொடர்ந்து அணுஆயுத உற்பத்தி, ஏவுகணை சோதனை என வடகொரியா நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் உலக நாடுகளில் இருந்து வடகொரியா தனித்து இருக்கிறது.
நேற்று புத்தாண்டை முன்னிட்டும் வடகொரியா ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இது குறித்து அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பேசுகையில், வட கொரியாவை தனிமைப்படுத்துவதிலும், நம்மை திணறடிப்பதிலும் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் ஆர்வமாக உள்ளது.’ என குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போது நிலவும் சூழ்நிலையால் நமது ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகியுள்ளது’ எனவும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார் .