தென் கொரியாவிற்கு பயணிக்கும் வடகொரியா நாடாளுமன்றத் தலைவர்!
வடகொரியா தனது நாடாளுமன்றத் தலைவரான கிம் யாங் நாம் என்பவரை, தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க அனுப்ப உள்ளது. தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் வரும் 9ஆம் தேதி தொடங்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியாவும் பங்கேற்கிறது.
இதற்காக வீரர் வீராங்கனைகளுடன் இதுவரை இல்லாத அளவில் அரசில் உயர்நிலைத் தலைவரான கிம் யாங் நாம் என்பவரைத் தொடக்க விழாவுக்கு அனுப்பி வைக்க உள்ளது. வடகொரியாவின் 3 தலைமுறைத் தலைவர்களின் கீழ் பணியாற்றியவர் என்கிற பெருமை கொண்ட கிம் யாங் நாமுக்குத் தொண்ணூறு வயதாகிறது.
அவர் 1998ஆம் ஆண்டில் இருந்து வடகொரிய நாடாளுமன்றத்தின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.