US Election 2020 LIVE : நம் ஜனநாயகத்தை யாரும் பறிக்கவும் முடியாது,நாங்கள் சரணடையவும் மாட்டோம் – ஜோ பைடன்

Default Image

உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு  விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது ,தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 264 சபை ஓட்டுகளையும் ,டொனால்ட் ட்ரம்ப் 214 ஓட்டுகளையும் பெற்றுள்ளார் .இன்னும் வெற்றி பெற 6 இடங்கள் தேவைப்படுவதால், ஜோ பைடன் அடுத்த அமெரிக்கா அதிபராவது உறுதிசெய்யப்பட்டுவிட்டது .

இந்நிலையில் ஜோ பைடன் டெலாவேர் மாநிலத்தில் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்,அப்பொழுது அவர் ​​நீண்ட எண்ணிக்கையிலான எண்ணிக்கையின் பின்னர், ஜனாதிபதி பதவியை வெல்வதற்குத் தேவையான 270 தேர்தல் வாக்குகளை எட்டுவதற்கு போதுமான மாநிலங்களை நாங்கள் வென்று கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகிறது.

நாம் வெற்றிபெற்றுவிட்டோம் என்பதை அறிவிக்க இங்கு வரவில்லை, ஆனால் எண்ணிக்கை முடிந்ததும் நாம் வெற்றியாளர்களாக இருப்போம் என்று நாங்கள் நம்புகிறோம்” இப்போது, ​​ஒவ்வொரு வாக்குகளும் எண்ணப்பட வேண்டும்.அதுவரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று ஜோ பைடன் கூறினார் .

மேலும் அவர் கூறுகையில்,யாரும் நம் ஜனநாயகத்தை எங்களிடமிருந்து பறிக்கப் போவதில்லை, இப்போது இல்லை, எப்போதும் இல்லை. அமெரிக்கா வெகுதூரம் வந்துவிட்டது, அமெரிக்கா பல போர்களை நடத்தியுள்ளது, அது நடக்க விடாமல் அமெரிக்கா மிக அதிகமாக சகித்துள்ளது என்று கூறினார் .

வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும் பொழுது டிரம்ப் தனது வெற்றி பறிபோய்விடுமோ என்று பயந்து ,ட்விட்டர் முதல் செய்தியாளர் சந்திப்பில் தனது எதிர்ப்பு குரல்களை பதிவு செய்தார்.அதன் உச்சகட்டமாக வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாகவும் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லப்போவதாக அறிவித்தார் அதன் பின்னர் வாக்கு எண்ணிக்கையில் சற்று தொய்வு ஏற்பட்டது .

இதை கருத்தில் கொண்டு பேசியுள்ள ஜோ பைடன் மக்களாகிய நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்,எங்களை யாரும் கொடுமைப்படுத்தவும்  முடியாது ,சரணடையவும் மாட்டோம் .”எனக்கு நம்பிக்கை உள்ளது, நாங்கள் வெற்றிகரமாக வெளிப்படுவோம்.”என்று தனது டிரம்ப் க்கு எதிரான குரலை உயர்த்தி கூறினார் .

ஜோ பைடன்  70 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார் , இது அமெரிக்க வரலாற்றில் வேறு எந்த ஜனாதிபதி வேட்பாளரும் பெற்றிடாத வாக்குகளாகும் .

live :அமெரிக்க தேர்தல் முடிவுகள் பற்றி தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் தினச்சுவடு தமிழுடன் .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்