வரும் வியாழன் வெளியாக இருந்த நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆனது…

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் மார்ச் 19-ம் தேதி வியாழக்கிழமை புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதில்,நோக்கியா 8.2 5ஜி, என்ட்ரி லெவல் நோக்கியா சி2, நோக்கியா 5.3உள்ளிட்ட மொபைல் போன்களை ஹெச்.எம்.டி. குளோபல் அறிமுகம் செய்யலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி
- நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் டிஸ்ப்ளே,
- வாட்டர் டிராப் நாட்ச் மற்றும்
- 18.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
- மேலும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 அல்லது
- ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்படலாம்.
- மேலும் அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம்,
- 64 ஜி.பி. மெமரி மற்றும்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா,
- 5 எம்.பி. சென்சார்,
- இரண்டு 8 எம்.பி. சென்சார்கள் மற்றும்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.
- நோக்கியா 5.3ஸ்மார்ட்போன் சார்கோல் மற்றும் சியான் நிறங்களில் வெளியாகலாம் என தெரிகிறது.
- இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 13,300 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025