#BREAKING: இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2021-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசு கடந்த நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2021-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை தேர்வு குழு அறிவித்துள்ளது.
தான்சானியா நாட்டை சேர்ந்த அப்துல் ரசாக் குர்னா தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவை வளைகுடா நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து செல்லும் மக்களின் வாழ்வியல் பற்றிய நாவல்களை எழுதியுள்ளார். ஏற்கனவே, வேதியியலுக்கான நோபல் பரிசு ஜெர்மனியின் பெஞ்சமின் லிஸ்ட், அமெரிக்காவின் டேவிட் டபிள்யு சி மேக்மில்லன் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் சியுகுரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹாசல்மேன் மற்றும் இத்தாலியின் ஜார்ஜியோ பாரிசி ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. மேலும், மருத்துவத்திற்கான நோபல் பரிசு டேவிட் ஜூலியஸ்,ஆர்டெம் படபூட்டியன் ஆகிய இருவருக்கு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025