2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .
பொருளாதாரம், அமைதி,மருத்துவம், இயற்பியல்,இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ம் நோபல் பரிசுகள் ஆண்டுதோறு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டும் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு துறையாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இன்று 2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு சர்வதேச அளவில் வறுமையை ஒழிக்கும் திட்டங்களை வகுத்ததற்காக 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .அதில் இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜீ,எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.நோபல் பரிசு 3-பேருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.இதில் அபிஜித் பானர்ஜி இந்தியாவில் உள்ள கொல்கத்தாவில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நோபல் பரிசு வாங்கிய பெண்மணியான எஸ்தர் டூஃப்லோ, அபிஜித் பானர்ஜியின் மனைவி ஆவார்.