நோபல் பரிசு : ".பி ஆலீஸன்" ," தசுக்கோகு ஹன்ஜோ" ஆகிய இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது..!!
நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும்.இந்த நோபல் பரிசு 1901ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம்மில் நடைபெற்றது.இதில் இன்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுவதாக இருந்தது.அதன்படி மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு புற்றுநோய் மருத்துவ கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டது.இந்த பரிசு இரண்டுபேரும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு .பி ஆலீஸன் மற்றும் தசுக்கோவுக்கு ஹோன்சோ ஆகிய இருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU