கட்சி விவகாரம் தொடர்பாக பதில் சொல்ல நேரமில்லை என விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஜய் அவர்களின் தந்தையும் பிரபல இயக்குநருமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் அண்மையில் விஜய் மக்கள் இயக்கம் எனும் பெயரில் அரசியல் கட்சி துவங்கியுள்ளதாக சலசலப்புகள் ஏற்பட்டது. இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், இந்த கட்சியில் தனது ரசிகர்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் எனவும், கட்சியில் தனது புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் அவ்வாறு செய்தால் நடவடிக்கை எடுப்பேன் எனவும் விஜய் அண்மையில் கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள், விஜய் பெயரில் 1993 ல் துவங்கிய நற்பணிமன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டிய தேவை தனக்கு இருந்ததால் தான் அவ்வாறு செய்ததாகவும், அதற்கும் விஜய்க்கும் சம்மந்தமில்லை என கூறுவது அவரது கருத்து அதற்காக எங்களது உறவில் விரிசல் ஏற்பட்டு விட்டது என நீங்கள் நினைத்தால் அது உங்களின் கற்பனை. தற்பொழுது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை, வேண்டுமானால் நான் கட்சி ஆரம்பித்ததற்கான காரணத்தை தனித்தனியாக வந்து கேளுங்கள் கூறுகிறேன், இப்போது சொல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…