வரலாற்றில் இன்று(11.03.2020)… ”புகைப்பிடிக்க வேண்டாம் தினம்” இன்று
உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளுள் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. உலக சுகாதார நிறுவனம், ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமாக சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என கூறுகிறது. இதில் நிகோடின், நார் நிகோடின், அனபேசின் என்ற வேதி பொருள்கள் மனிதனை அடிமையாக்கி மீண்டும் மீண்டும் புகைக்க வைக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில், புகைப்பழக்கத்தில் சீனா முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதிலும் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
உலகில் அதிக மக்களின் மரணங்களுக்கு புகைப்பழக்கம் ஒரு காரணியாக இருக்கிறது. இதன் அடிப்படையில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவில் தனி நபர் ஒருவர் ஒரு வருடத்தில் 4,124 சிகரெட்டுகளைப் புகைப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பெலாரஸ் 2வது இடத்திலும் லெபனான் 3-வது இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில், இந்தியா 159-வது இடத்தில் உள்ளது.
புகைப்பதால் ஏற்படும் விளைவு:
புகைபிடிப்பதால் உலகளவில் ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 10 லட்சம் பேர் இந்தியர்கள். புகையிலையினால் ஏற்படும் வாய்புற்றுநோய், லட்சத்தில் 10 பேரை பாதிக்கிறது. உலகில் 47 சதவீத ஆண்களும், 12 சதவீத பெண்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 53 சதவீத ஆண்களும், 3 சதவீத பெண்களும் புகைப்பழக்கம் உள்ளவர்கள். இந்தியாவில் 53 சதவீத ஆண்களும், 3 சதவீத பெண்களும் புகைப்பழக்கம் உள்ளவர்கள்.
தினம் ஒரு சிகரெட் பிடித்தால் ஒருவரின் ஆயுளில் தினமும் 5 நிமிடங்கள் குறைகிறது. புகைப்பிடிப்பதால் அல்லது பிறர் பிடிக்கும் சிகரெட், பீடி புகையை நுகர்வதால் இருமல், சளி, உருவாகி ஆஸ்துமா வருகிறது. ஆஸ்துமா இருப்பவர்கள் புகைத்தால் அது மேலும் தீவிரமாகிறது. இறுதியில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கே உலை வைக்கிறது. வாகன விபத்துக்கள் போன்றவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை விட புகையிலை பழக்கத்தால் ஏற்படும் மரணம் அதிகம். ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் புகைப்பிடிப்பதால் உயிரிழக்கின்றனர். இவர்களில் 10 லட்சம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே புகை நமக்கு பகை, புகையை மறப்போம் புன்னகையுடன் வாழ்வோம்..