“எவ்வளோ கத்தினாலும் ஆட்சியமைக்க முடியாது” அமைச்சர் காட்டம்..!!
மேலும், பெட்ரோல் டீசல் விலை ஜி.எஸ்.டி-க்குள் வந்தால், மாநில அரசுக்கு கிடைக்கும் பிரதான வருவாய் நிறுவிடும்.சுமார் 30,000 கோடி ரூபாயில் 15,000 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு சென்றுவிடும். தற்போது நாம் கொடுக்கும் வரி, நமக்கே நலத் திட்டங்களாக வருகிறது. எரிபொருள் விலை ஜி.எஸ்.டிக்குள் வந்தால், நாம் கட்டும் வரி மற்ற மாநிலங்களுக்கு தான் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜி.எஸ்.டியை கடுமையாக எதிர்த்த மாநிலம் தமிழகம். இதற்கு முன்னாள் இருந்த காங்கிரஸ் அரசு, நம் மாநிலத்திற்கு தர வேண்டிய 5000 கோடி ரூபாயை கொடுக்கவில்லை.
அமெரிக்க டாலரிக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிக்கடி மாறி வருவதால் தான் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை அதிகப்படுத்திவிடுகின்றன. இதற்கு ஏற்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் திமுகவினர் அல்ல முக.ஸ்டாலின் என யாராக இருந்தாலும் எவ்வளவு கத்தினாலும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர முடியாது என காட்டமாக தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.
DINASUVADU